இசை: ஹாரிஸ் ஜயராஜ்
நடிகர்கள்: சூர்யா, தமன்னா
1.பளபளக்குற பகலா நீ - பாடல் வரிகள்
பாடியவர்: ஹரிஹரன்
பளபளக்குற பகலா நீ
பட படக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழை அடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணம் மணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை
கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துபூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா
அதை அனுபவிடா
காலகாலமாக பெருசுங்கடா
ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா
பளபளக்குற பகலா நீ
பட படக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழை அடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணம் மணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
எட்டி தொடும் வயது இது
ஒரு வெட்டுக் கத்தி போல் இருக்கும்
அதிசயம் என்ன வென்றால்
அதான் இரு பக்கம் கூர் இருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புது புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளி சேர்த்து
ஒரு மூட்டை கட்டி வா நீ வா நீ
பளபளக்குற பகலா நீ
பட படக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழை அடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணம் மணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
இதுவரை நெஞ்சில் இருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடு வானம் வரை போய் வருவோம்
அடை மழை வாசல் வந்தால்
கையில் குடை இன்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்
பளபளக்குற பகலா நீ
பட படக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ
மழை அடிக்கிற முகிலா நீ
திணறடிக்கிற திகிலா நீ
மணம் மணக்குற அகிலா நீ
முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால் ரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை
கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துபூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா
அதை அனுபவிடா
காலகாலமாக பெருசுங்கடா
ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நகலின் நகலா நீ
தமிழா
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நகலின் நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நகலின் நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நக நக நக நகலா நீ
நகலின் நகலா நீ
Video
பளபளக்குற பகலா நீ - பாடல் வரிகள்
ஓ ஆயியே யியாயியே யியாயியே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
விழி மூடி யோசித்தால்
No comments:
Post a Comment