தசாவதாரம்-ஓம் நமோ நாராணாய | |
படம்: தசாவதாரம் பாடல்: வைரமுத்து பாடியவர்: ஹரிஹரன் இசை: ஹிமேஷ் ரேஷ்மையா ஓம் நமோ நாராணாய கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது எட்டில் ஐந்து எண் கழியும் என்றால் ஐந்தில் எட்டு ஏன் கழியாது அட்ச அட்சரம் பார்க்கும் நெஞ்சு பஞ்ச அட்சரம் பார்க்காது ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான் ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுத்தம் தான் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது இல்லை என்று சொன்ன போதும் இன்றியமையாது தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது (இல்லை என்று சொன்னபோதும்.) வீர சைவர்கள் முன்னால் எங்கள் ஈர வைணவம் தோற்காது மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான் சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது (கல்லை மட்டும் கண்டால்..) நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது (நீருக்குள்ளே மூழ்கினாலும்..) வீசும் காற்று வந்து விளக்கணைக்கும் வெண்ணிலாவை அது அணைத்திடுமா கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும் அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது தெய்வம் என்று பார்த்தால் சமயம் தெரியாது கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது |
Thursday, April 9, 2009
Dasavadhaaram - kallai mattum kandaal
Labels:
Dasavadhaaram
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment