Monday, April 20, 2009

Pasanga Padal Varigal

1. அன்பாலே அழகாகும் வீடு - பாடல் வரிகள்

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு


அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு
அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு


வாடகை வீடே என்று
வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது ஒ
சோகமே வாழ்க்கை என்று
சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது
மாறாமல் வாழ்வும் இல்லை
தேடாமல் ஏதும் இல்லை
நம்பிக்கை விதையாகுமே
கலை கின்ற மேகம் போலே
காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே
அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

பாசமே கோவில் என்று
வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினம்தோறுமே
ஆ...நேசமே மாலை என்று
நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணை யாகுமே
ஆ...கூடினால் கோடி நன்மை
சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியமலே

ஏணியே தேவையில்லை
ஏறலாம் மேலேமேலே
தோல்விகள் வெறும் கானலே
அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு
அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும் போது
வேறொன்றும் அதற்கில்லை ஈடு

VIDEO


மற்ற பாடல் வரிகள்

No comments:

Post a Comment