Monday, April 20, 2009

Sarvvam Padal Varigal


4. சில இரவுகள் இரவுகள் தான் - பாடல் வரிகள்

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே
என் இமைகளை நீவினாய்
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே
என் இமைகளை நீவினாய்


நீயோடும் பாதை என் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கருமணியில் தேடிப்பார்
உன் காலடித்தடங்களை காட்டுமே....ஓ..
பிரபஞ்ச இரகசியம் புரிந்ததே
உன் சிறுமை பிரிவில் தெரிந்ததே
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள் தப்பிச்செல்ல சகிக்குதே
உண்மைகள் சொல்வதும்
உணர்ச்சியை கொல்வதும்
உயிர் வரை செல்வதும் நீதானே
நீதானே நீதானே
என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே
என் இமைகளை நீவினாய்


நீ தேடத்தேட ஏன் தொலைகிறாய்
என் வலியில் மறுபடி கிடைக்கிறாய்
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்
இதய சதுக்கம் நடுங்குதே
உன் ஞாபகம் வந்த பின்பு அடங்குதே
அலையில் ஒதுங்கும் கிளிஞ்சலாய்
என் நிழலே என்னை விட்டு ஒதுங்குதே
ஒரு கணம் சாகிறேன்
மறுகணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே நீதானே
நீதானே நீதானே நீதானே
என் நரம்புக்குள்ளே
நீதானே நீதானே நீதானே
என் நரம்புக்குள்ளே


மற்ற பாடல் வரிகள்
சுட்டால் சூரியனை பொத்துக்கிட்டு
காற்றுக்குள்ளே வாசம் போல
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
சில இரவுகள் இரவுகள் தான்
அடடா வா அசத்தலாம்

No comments:

Post a Comment