Sunday, April 26, 2009

Pokkisham Song

4. கனவு சில சமயம் கலையும் - பாடல்
கனவு சில சமயம் கலையும் நிலையுமுண்டு
முடிவு தெரியும் வரை பொறுத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகளுண்டு
விடியும் பொழுது வரை விழித்திரு
இது யூகிக்க முடியா கணிதமே
ஒரு போருக்கு போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகடா
துன்பம் நீங்கிப்போகும் தோல்விகூட அழகடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

தவிப்பு ஒருபுறமும் துடிப்பு மறுபுறமும்
தொடங்கும் இதுவும் ஒருயாத்திரை
இரவு துயிலிருக்க இதயம் விழித்திருக்க
அலையில் புரள்கிறது ஆண்கலை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பை கூறலாம்
இன்று போல நாளைஇல்லையென்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே

மற்ற பாடல் வரிகள்

நிலா நீ வானம் காற்று
அழகு முகம் மலர்ந்து
அஞ்சல் பெட்டியை கண்டதுமே
கனவு சில சமயம் கலையும்

No comments:

Post a Comment