
என் நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி இறக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன்
என் தோளுக்கு மேலே தூரிகை தீண்டும் உணர்வு முளைப்பதேன்
இராட்டினங்கள் மூளைக்குள்ளே சுற்றி சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்
பம்பரங்கள் தானே சுழலும் பரபரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்
அஞ்சல் பெட்டியை கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி ர ட ர ட ர
ஊஞ்சலாடும் மனமே உனக்கு என்ன நடந்தது
நான் உயிரில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது
உச்சந்தலையை வானவில்லும் துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகை பூவாய் மலருகின்றது
உள்ளக்குழியை வாசக்காற்று சலவை செய்தது
நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பதுபோல கவிதை சொன்னது
கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலே போக வால் முளைத்தது
என்னை நானே ரசித்துக்கொள்ளும் நிலமையானது
இது நித்தம் நிகழும் ஆனால் கூட புதுமையானது
மற்ற பாடல் வரிகள் நிலா நீ வானம் காற்று
அழகு முகம் மலர்ந்து
அஞ்சல் பெட்டியை கண்டதுமே
கனவு சில சமயம் கலையும்
No comments:
Post a Comment