
அழகு முகம் மலர்ந்து
தாயின் மடி கடந்து
உலகம் ரசித்திருக்கும் குழந்தையே
எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே
சிலர் வாழ்க்கை இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை நீண்ட தூர பயணமே
அதை வாழ்ந்து பார்க்க தூண்டும் நம்மை உலகமே
தினம் ஒவ்வொரு நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு விடியலும் பயணமே
புதிய தோற்றங்களும் புதிய மாற்றங்களும்
கனவை தருகிறது வாழ்க்கையில்
புதிய கேள்விகளும் புதிய தேடல்களும்
முழுமை அடைகிறது பூமியில்
இங்கு நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும் பயணமே
இது காலம் தோறும் மாறிடாமல் தொடருமே
இதை காதலோடு ஏற்க வேண்டும் எவருமே
மற்ற பாடல் வரிகள் நிலா நீ வானம் காற்று
அழகு முகம் மலர்ந்து
அஞ்சல் பெட்டியை கண்டதுமே
கனவு சில சமயம் கலையும்
No comments:
Post a Comment